March 10, 2007

கவிமழை - ம.இளங்கோவன்

சந்தை மேடு

காலையிலேயே

சுறுசுறுப்பாகிவிடும்அந்த இடம்

ஒரு அடி உயரத்திற்கு

மண்குவித்து

கோணி பரப்பி

மூட்டைகளை

ஆ வெனத் திறந்துவைத்துக்

காத்திருப்பார்கள்

சனிமூலையோரம் ஆடுமாடுவாங்குபவர்கள்

துணிபோர்த்திவிரல்களில் விலைபேசுவார்கள்

சந்தைமேடு செல்லும்பாதையோரம்

கிளி ஜோசியக்காரன்

நான்கு சதுர அடியில் ஆணி அடித்துத்

துணிச்சுவர் எழுப்பி

கூரையில்லா வீட்டில்

கிளி தரும் சீட்டில் வெள்ளாமைக்கான

எதிர்காலம் சொல்லிகாசுசேர்ப்பான்

வீட்டு முருங்கைக்காயைத் திருடி

ரூபாய்க்கு இரண்டாய்விற்று

ரெண்டாவது ஆட்டம் பார்ப்போம்

மீனாட்சி கொட்டாயில்

அடுத்து

ஆடுமாடு வாங்க வருவோருக்காக

துண்டில் விலைபேசிய

தரகு ராமசாமி

சுhராயம் குடித்துசாய்ந்திருப்பான்

ஆலமரத்தடிபஸ்ஸேன்டில்

அன்றைக்கு மட்டும்

கூச்சல் கூடாக மூச்சிறைக்க

ஏரிக்கரை ஏறி இறங்கும்

எங்கள் ஊர் பஸ்

அடிக்கடி குறுக்கும்நெடுக்குமாய்

ஓடும் பஸ்சாலையை கடக்க

விளக்கை எதிர்பார்த்துக் கிடக்கும்

பலருடன் சேர்ந்து கடக்க வுண்டியுள்ளது

அடையாளம் வைத்துசென்ற

வீடுகள்ஓராண்டுக்குள்

அடுக்குமாடி குடியிருப்பாகின்றன

ஆரசமரம் ஆலமரம் புளியமரம் இல்லாமல்

வேகமாய் வளரும்

தூங்குமூஞ்சி மரங்களுக்கிடையில்

வாழும்போதும் நினைவில் வந்து போகிறது

கருவாடு வாசனைமாறாத

அந்த்ச் சந்தைமேடு

முனைவர் ம.இளங்கோவன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------


இருண்மை

இயல்பாய் இருப்பவனுக்குப்

பைத்தியம் என்றுபெயர்

ஓர் இசை மெடடில்

இயைந்து கிடப்பவனுக்குஇசைப் பைத்தியம்

ஆடையேஒருஅவமானச் சின்னம்

இங்குயாருக்கோ பொருந்தும்

ஆடையை

யார் யாரோஅணிந்து கொண்டு அலைகிறார்கள்

உள்ளம்எப்போதும்

வெளிச்சம் விரும்புவதில்லை

அதனால் தான்

வார்ததைகள் நாகரிகப் போர்வைக்குள்

ஒளிந்து கொள்கின்றன

இயல்பாய்

இருப்பதற்கு இருண்மையே

முனைவர் .இளங்கோவன்

கவிமழை - சு.சா.அரவிந்தன்

காலம்

எண்சீர் கழிநெடிலடி விருத்தம்

குளுமையும் குழந்தையும் ஓய்வுபெறுங் காலம்
இளமையும் முதுமையும்; இடம்மாறுங் காலம்
தற்பெருமை பேசவே நாநீளுங் காலம்
தன்னடக்கம் நாவடக்கம் தலைமறையும் காலம்
நேர்மையினை அப்பாவியாய் பரிகசிக்கும் காலம்
நேரான வஞ்சகத்தை ஆதரிக்குங் காலம்
தினங்களால் உறவுகளை இழிவாக்குங் காலம்
மனிதநேயம் எதுவென்று கேள்விகேட்குங் காலம்

காதலும் காமமும் ஒன்றென்னும் காலம்
காதலையே பொழுதுபோக்காய் மாற்றிக்கொண்ட காலம்
மானங்காக்க ஆடையென மறந்துபோன காலம்
மனமும்நம் ஆடைபோல் சுருங்கிப்போன காலம்
கடவுளையே கடைப்பொருளாய் ஆக்கிவிட்ட காலம்
கடமைக்காய் இறைவனையே வணங்குகின்ற காலம்
மன்னிக்கும் குணத்திற்கோ தேய்பிறைக் காலம்
மறக்காமல் பழிவாங்கல் ஓங்குகின்ற காலம்

தாய்மொழியும் தாயென உணர்வது எக்காலம்
தானென்ற எண்ணம் அழிவது எக்காலம்
நலம்நாடும் இலக்கியத்தை படிப்பது எக்காலம்
நாகரிக கலப்பினை நசுக்குவ தெக்காலம்
பெரியோர்க்கு மரியாதை தருவ தெக்காலம்
பொதுஇடத்தில் கண்ணியமாய் இருப்ப தெக்காலம்
மனிதநேயம் உலகெங்கும் தழைக்கின்ற எக்காலம்
மேற்சொன்ன யாவையும் சரியாகும் அக்காலம்

சு.சா.அரவிந்தன்
----------------------------------------------
இருண்மை


இயல்பாய்
இருப்பவனுக்குப்
பைத்தியம் என்றுபெயர்
ஓர் இசை மெடடில்இயைந்து
கிடப்பவனுக்குஇசைப் பைத்தியம்
ஆடையேஒருஅவமானச் சின்னம்
இங்குயாருக்கோ பொருந்தும்
ஆடையையார் யாரோஅணிந்து கொண்டு அலைகிறார்கள்
உள்ளம்எப்போதும்
வெளிச்சம் விரும்புவதில்லை
அதனால் தான்வார்ததைகள்
நாகரிகப் போர்வைக்குள்ஒளிந்து கொள்கின்றன
இயல்பாய்இருப்பதற்குஇருண்மையே



முனைவர் .இளங்கோவன்
====================================================================
முகவரியே

முகத்தால் முகர்ந்த முகவரியே - என்இதயத்தில் இடம்பிடித்த
இளமையே கடுகில் கடலை நுழைத்தாற்போற் -
என்மனதில் மாற்றம் புரிந்தாயே
மனம் நிறைந்த பாராட்டு -
ஒருகணம் நிகழ்ந்த பரிமாற்றம்
எங்கிருந்தாய் இத்தனை நாள்?
ஏன் வந்தாய் என் கண் முன்னால்சிந்தை
ஏதுமின்றிஏற்றுக்கொண்டேன்
உன் காதலை
என் பார்வையில்
ஏற்றுக்கொண்டேன்
எடுத்துக் கொண்டேன்
உன் இதயத்தை
என் அன்பால்
எடுத்துக் கொண்டேன்
அள்ளித் தந்தேன்
என் அன்பை உன் நினைவில்
அள்ளித் தந்தேன்
அள்ளிக் கொண்டேன்
உன் அழகை என் கண்ணால்
அள்ளிக் கொண்டேன்

சு.சா.அரவிந்தன்


email us @ aranss@myway.com